சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு: வரும் ஆகஸ்ட் வரையில் சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும்!

சின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு திட்டம் மற்றும் சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், சின்ன வெங்காயத்திற்கு விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம்‌ மற்றும்‌ ஒடிசா ஆகிய பகுதிகளில்‌ அதிகளவு சின்ன வெங்காயம்‌ பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயம்‌ பயிரிடுவதிலும்‌, வியாபாரம்‌ செய்வதிலும்‌ தமிழகத்திற்கு கடும் போட்டியாக கர்நாடகா திகழ்கிறது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும்‌ தோட்டப்பயிர்த்‌ துறையின்‌ அறிக்கையின்‌ படி, 2020-27 ஆண்டில்‌, தமிழ்நாட்டில்‌ சின்ன வெங்காயம்‌ 0.51 லட்சம்‌ ஹெக்டேர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 3.57 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌, மொத்த வெங்காய பரப்பளவில்‌ 80 சதவீதத்திற்கும்‌ மேல்‌ சின்ன வெங்காயமும்‌, மீதம்‌ பெல்லாரி வெங்காயமும்‌ பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல்‌, திருப்பூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி மற்றும்‌ நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்‌ சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர்‌.

கர்நாடகா மற்றும்‌ ஆந்திரபிரதேசம்‌ போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வரும்‌ அதிக வெங்காய வரத்து காரணமாக தமிழகத்தில்‌ சின்ன வெங்காயத்தின்‌ விலை தொடர்ந்து அழுத்தத்தில்‌ உள்ளது. மேலும்‌, தமிழ்நாட்டில்‌ சின்ன வெங்காயத்தின்‌ பரப்பளவு, உற்பத்தி மற்றும்‌ போதுமான அளவு இருப்பு இருப்பதன்‌ காரணமாக வரவிருக்கும்‌ மாதங்களில்‌ விநியோக நிலைமை தேவைக்கும்‌ அதிகமாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழல்‌ வரும் ஆகஸ்ட 2022 வரை தொடரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல்‌ சந்தையில்‌ நிலவிய சின்ன வெங்காயம்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில் வரும்‌ ஆகஸ்ட்‌ மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம்‌ சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.20 முதல்‌ ரூ.22 வரை இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில, சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்

அ) உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டுஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌-641 003,

தொலைபேசி - 0422-2431405

ஆ) இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி,

தமிழ்நாடு பாசன விவசாய நவீன மயமாக்கல்‌ திட்டம்‌,

நீர்‌ தொழில்நுட்ப மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003,

தொலைபேசி எண் - 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

காய்கறிப்‌ பயிர்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்‌ - 641 003,

தொலைபேசி எண்‌: 0422-6611374

Newsletter