கோவை கொப்பரை கொள்முதல் திட்டத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு!

கொப்பரை கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம் மற்றும் செஞ்சேரி ஆகிய மூன்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கொப்பரை கொள்முதல் நிலையங்களாகவும், ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய இரண்டு நிறுவனங்களை கூடுதல் கொள்முதல் நிலையங்களாகவும் அரசு அறிவித்துள்ளதாகவும், இந்த கொள்முதலுக்கு பிப்ரவரி முதல் ஜூலை வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகில் உள்ள விற்பனை கூட காப்பாளர்கள் (பொள்ளாச்சி- 7010615376, நெகமம்- 9894687827, செஞ்சேரி- 9751527708, ஆனைமலை- 9976168113, கிணத்துக்கடவு- 986154644) அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தத் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter