தென்னையை தாக்கும் 'கருத்தலை புழு'- கட்டுப்படுத்த கோவையில் வேளாண்மை துறை ஆய்வு..!

சூலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை உதவி மற்றும் தமிழ்நாடு பேராசிரியர்கள் பாதிப்புக்குள்ளான தென்னந்தோப்புகளை நேரில் ஆய்வு செய்தனர்.



கோவை: கோவையில் தென்னை கருந்தலைப்புழுகளை கட்டுப்படுத்த வேளாண்மை துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 87,500 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள அனைத்து வேளாண் வட்டாரங்களிலும், தென்னையில் தோன்றும் பூச்சிகள் மற்றும் நோய் தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்னையில் தோன்றும் கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கையாள கோவை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.சித்ரா தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.



அதன் படி தோப்புகளில் கருந்தலை புழுக்கள் தாக்குதல் இருப்பது தென்பட்டால், இதனைக் கட்டுப்படுத்த, முதலில் பூச்சி தாக்கிய மட்டைகளை வெட்டி அகற்றி நெருப்பில் இட்டு அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 4 விளக்குப் பொறி கருவிகளை வைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

புழுக்களைக் கட்டுப்படுத்திட பெத்திலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளைத் தோப்புகளில் விடவேண்டும். மேற்படி ஒட்டுண்ணிகள் ஹெக்டருக்கு 3000 எண்ணிக்கை என்ற அளவில் தாக்குதல் உள்ள இடத்தில் தோப்புகளில் விடவேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சூலூர் வட்டாரம் பதுவம்பள்ளி கிராமத்தில் தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று சூலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை உதவி மற்றும் தமிழ்நாடு பேராசிரியர்கள் பாதிப்புக்குள்ளான தென்னந்தோப்புகளை நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்த தேவையான பிரக்கோனிட் ஒட்டுண்ணிகள் தற்போது ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு உள்ளதால் விவசாயிகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு உடன் இந்த புழுக்களைக் கட்டுப்படுத்த தெரிவிக்கப்படுகிறது.

Newsletter