கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க உலக தேனீக்கள் தினம் அனுசரிப்பு..!

மனித நடவடிக்கைகளால்‌ தேனீக்கள்‌ மற்றும்‌ மகரந்த‌ சேர்க்கையில்‌ ஈடுபடும்‌ உயிரினங்களுக்கு ஏற்படும்‌ தீங்குகளிலிருந்து அவற்றைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக தேனீ தினம்‌ கொண்டாடப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உலக தேனீ தினம் கொண்டாடப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உலக தேனீ தினம்‌ 20.05.2022 அன்று கொண்டாடப்பட்டது. ஐரோப்பாவில்‌ உள்ள ஸ்லோவேனியா நாட்டில்‌ 1734ல்‌ பிறந்த புகழ்பெற்ற தேனீ‌ வளர்ப்பாளர்‌ ஆண்டன்‌ ஜான்சாவின்‌ பிறந்தநாளைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ மே 20ஆம்‌ தேதியை உலக தேனீ தினமாக ஐக்கிய நாடுகள்‌ சபை டிசம்பர்‌ 2017 இல, அங்கீரித்தது.

முனைவர்‌. செ.வெ. கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளாண்‌ பூச்சியியல்‌ துறை கோவை, உலக தேனீ‌ தினத்தைக் கொண்டாடுவதற்கான காரணத்தை அறிமுகப்படுத்தினார்‌. உலக தேனீ‌ தினத்தின்‌ நோக்கம்‌, சுற்றுச்சூழல்‌ அமைப்பில்‌ தேனீக்கள்‌ மற்றும்‌ பிற மகரந்தச்‌ சேர்க்கையில்‌ ஈடுபடும்‌ உயிரினங்களின்‌ பங்கை அங்கீரிப்பதாகும்‌. மனித நடவடிக்கைகளால்‌ தேனீக்கள்‌ மற்றும்‌ மகரந்தச்‌ சேர்க்கையில்‌ ஈடுபடும்‌ உயிரினங்களுக்கு ஏற்படும்‌ தீங்குகளிலிருந்து அவற்றைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வைத் தேனீ தினக்‌ கொண்டாட்டங்கள்‌ ஏற்படுத்துகின்றன என்று கூறினார்‌.

தமிழ்நாடு வேளானர்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ. கீதாலட்சுமி, பல்கலைக்கழக வளாகத்தில்‌ அமைந்துள்ள தேனீ வளர்பபகத்தில்‌ உலக தேனீ தின கொண்டாட்டத்திற்கான நிகழ்வைத் துவக்கி வைத்தார்‌.



முன்னதாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இறுதியாண்டு இளங்கலை பயிலும்‌ மாணவர்களும்‌ தமிழ்நாட்டின்‌ முன்னோடி தேனீ‌ வளர்ப்பாளர்களும்‌ அமைத்திருந்த தேன்‌ வளர்ப்பு கண்காட்சியைத் திறந்து வைத்தார்‌.



தேனீ வளர்ப்பாளர்களுடன்‌ கலந்துரையாடி அவர்கள்‌ மேற்கொள்ளும்‌ தேனீ வளர்ப்பு நடவடிக்கைகள்‌ குறித்து கேட்டறிந்ததுடன், பூங்கொத்து வழங்கி கௌரவித்தார்‌.



புதுப்பிக்கப்பட்ட தேனீக்கள்‌ ஆய்வகத்தையும்‌ துணைவேந்தர்‌ திறந்து வைத்தார்‌.



மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ தேனீ‌ வளர்ப்பவர்களிடம்‌ உரையாற்றிய துணைவேந்தர்‌, இலக்குகளை அடையத் தேனீக்களைப்‌ போல சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டியதன்‌ அவசியத்தை வலியுறுத்தினார்‌.



தேனீக்களின்‌ அழிவை ஏற்படுத்தும்‌ காரணிகளிலிருந்து தேனீக்களை பாதுகாக்கப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள்‌ மற்றும்‌ விவசாயிகளுக்கு அவர்‌ வேண்டுகோள்‌ விடுத்தார்‌.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குனர்‌, முனைவர்‌. மூ. சாந்தி தொடக்க விழாவிற்குத் தலைமை தாங்கி, தேனீக்களை பாதுகாக்கும்‌ வகையில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள்‌, ஆசிரியாகள்‌ மற்றும்‌ தேனீ‌ வளர்ப்பவர்களைப் பாராட்டினார்‌. தேனீ வளர்ப்பில்‌ பொருளாதாரம்‌ மற்றும்‌ வணிக அம்சங்களுக்கு முக்கியத்துவம்‌ அளிக்க வேண்டும்‌ என்று வேளாண்‌ கல்லூரி முதன்மையர்‌ முனைவர்‌ ந.வெங்கடேச பழனிச்சாமி தெரிவித்தார்‌. தோட்டக்கலைக்‌ கல்லூரியின்‌ முதன்மையர்‌, முனைவர்‌ .பெ. ஐரீன்‌ வேதமணி தனது உரையில்‌, தோட்டக்கலை பயிர்களின்‌ அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கையில்‌ தேனீக்கள்‌ பங்கை வலியுறுத்தி, தன்‌ மகரந்தச்‌ சோரக்கை ஏற்படும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ விதையில்லா‌ பயிர்‌ வகைகளின்‌ விளைச்சல்‌ அதிகரிப்பிலும்‌ தேனீக்கள்‌ அவசியம்‌ என்று தெரிவித்தார்‌.

தொடக்கத்தில்‌ பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ டாக்டர்‌ கோ. உமாபதி அனைவரையும்‌ வரவேற்றுப்‌ பேசினார்‌. உலக தேனீ தினத்திற்கான ஏற்பாடுகளை மற்ற ஆசிரியர்களுடன்‌ இணைந்து செய்த பூச்சியியல்‌ பேராசிரியர்‌ டாகடர்‌ மா. இரா. ஸ்ரீனிவாசன்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter