விவசாயிகளே.. இது உங்களுக்கான இடம்: கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலை.யில் பயறுவகை விதைகள்‌ விற்பனை..!

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில், பயறுவகைத்‌ துறையில்‌ உற்பத்தி செய்யப்பட்ட விதைகள்‌ விற்பனைக்கு உள்ளது. உற்பத்தியாளர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ தங்களுக்குத்‌ தேவையானதை பெற்றுக்‌ கொள்ளலாம்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, பயறுவகைத்‌ துறையில்‌ உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு பயறு வகைகளின்‌ ஆதார மற்றும்‌ சான்று நிலை விதைகள்‌ விற்பனைக்கு உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக, பயறுவகைத்‌ துறை, பயறுவகைகளின்‌ விதை இருப்பு நிலவரம்‌:-

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, பயறுவகைத்‌ துறையில்‌ உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு பயறு வகைகளின்‌ ஆதார மற்றும்‌ சான்று நிலை விதைகள்‌ விற்பனைக்கு உள்ளது. எனவே, விதை உற்பத்தியாளர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ தங்களுக்குத்‌ தேவையான விதைகளைப் பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

•துவரை கோ 8 ஆதார மற்றும்‌ சான்று விதை - 1000 கிலோ

•உளுந்து வம்பன்‌ 8 ஆதார மற்றும்‌ சான்று விதை- 16000 கிலோ

•உளுந்து வம்பன்‌ 11 ஆதார மற்றும்‌ சான்று விதை - 1400 கிலோ

•உளுந்து மதுரை 1 சான்று விதை- 3000 கிலோ

•பாசிப்பயறு கோ 8 சான்று விதை- 840 கிலோ

மேலும்‌ தகவலுக்கு:-

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

பயறுவகைத்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

தொலைப்பேசி எண்‌ - 0422 24590498

Newsletter