கோவையில் 'நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்‌'; காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் மேலாண்மை இயக்ககத்தின் கீழ் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, பயிர்‌ மேலாண்மை இயக்ககத்தின்‌ கீழ்‌, நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ (28.04.2022) நேற்று காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்‌.



இந்த விழாவிற்கு வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ முன்னிலை வகித்தார்‌.



இந்த துவக்க விழாவில்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி, வேளாண்மை உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ செயலர்‌ சி.சமயமூர்த்தி, (இ.ஆ.ப), மாவட்ட ஆட்சியர்‌ ஜி. எஸ்.சமீரன், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌ அ.சு.கிருட்டிணமூர்த்தி, முனைவர்‌ சி.ஆர்‌.சின்னமுத்து இயக்குநர்‌ (பொறுப்பு) பயிர்‌ மேலாண்மை இயக்ககம்‌, நம்மாழ்வார்‌ இயற்கை வேளாண்மை ஆராயச்சி மையத்தின்‌ தலைவர்‌ முனைவர்‌ செ.மாணிக்கம்‌ ஆகியோர்‌ தலைமையேற்றனர்.



இந்த ஆராய்ச்சி மையத்தில்‌ பணிபுரியும்‌ விஞ்ஞானிகளான முனைவர்‌ ரா.ஜான்சிராணி, முனைவர்‌ மா.சுகந்தி, முனைவர்‌ ரா.சுனிதா, மூத்த மற்றும்‌ இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள்‌ மற்றும்‌ அலுவலக ஊழியர்கள்‌ இந்த துவக்க விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்‌ செய்தனர்‌. மேலும்‌ இந்த விழாவில்‌ பல்கலைக்கழக அதிகாரிகள்‌ துறைத் தலைவர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ மாணவிகள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter