கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள் தயாரிக்கும்‌ பயிற்சி..!

“வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌” பயிற்சி 26.4.2022 மற்றும்‌ 27.4.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌.



கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள் தயாரிக்கும்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, “வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌”பயிற்சி 26.4.2022 மற்றும்‌ 27.4.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌. கீழ்கண்ட உணவு பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயிற்சி வழங்கப்படும்‌.

•உலர வைக்கப்பட்ட காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள் (Dehydrated vegetables and fruits)

•பலவகை பழ ஜாம்‌ (Mixed Fruit Jam)

•பழரசம்‌ (Squash)

•தயார்‌ நிலை பானம்‌ (Ready-to-Serve beverage)

•ஊறுகாய்‌ (Pickles)

•தக்காளி கெட்சப்‌ (Tomato Ketchup)

•ஊறுகனி (Candy)

•பழப்பார்‌ (Fruit bar)

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770/- (ரூபாய்‌ ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்‌)(ரூ.1500+ GST 18% ) — செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்‌. பயிற்சி கட்டணத்தைப் பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, கோயமுத்தூர்‌ -3 என்ற பெயரில்‌ வங்கி வரைவோலையாக எடுத்து பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌ - 3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌. மேலும்‌ விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்‌ - 0422 - 6611268

Newsletter