கோவை த.வே.பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி..!

நோனி தக்காளி மற்றும்‌ பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 20.04.2022 மற்றும்‌ 21.04.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ நடைபெறும்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளியில்‌ மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, நோனி தக்காளி மற்றும்‌ பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 20.04.2022 மற்றும்‌ 21.04.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ நடைபெறும்‌. கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படும்‌.

*நோனி - பிளைன்‌, நோனி - குவாஷ்,‌ நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌

*தக்காளி - சாஸ்‌, கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி

*பப்பாளி - ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூபாய்‌ ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்‌) (ரூ.1500 -GST 18% )- பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்‌.

மேலும்‌ விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப துறை,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைப்பேசி எண்‌ 0422 - 6611268

Newsletter