கோவை த.வே. பல்கலைக்கழகத்தில் பசுமைக்குடில்‌ அடிக்கல்‌ நாட்டும்‌ விழா மற்றும்‌ பயிர்‌ பூஸ்டர்கள்‌ விற்பனையகம்‌ துவக்க விழா..!

சுற்றுச்சூழல்‌ கட்டுப்பாட்டுடன்‌ கூடிய பசுமைக்குடில்‌ அடிக்கல்‌ நாட்டும்‌ விழா மற்றும்‌ புதுப்பிக்கப்பட்ட காட்சிக்‌ கூடத்துடன்‌ கூடிய பயிர்‌ பூஸ்டர்கள்‌ விற்பனையகம்‌ துவக்க விழா தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ மேலாண்மை இயக்குநரகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ பயிர்‌ வினையியல்‌ துறையில்‌ சுற்றுச்சூழல்‌ கட்டுப்பாட்டுடன்‌ கூடிய பசுமைக்குடில்‌ அமைப்பதற்கான அடிக்கல்‌ நாட்டும்‌ விழா மற்றும்‌ புதுப்பிக்கப்பட்ட விவசாயிகளின்‌ கண்காட்சிக்‌ கூடத்துடன்‌ கூடிய பயிர்‌ பூஸ்டர்கள்‌ விற்பனையகம்‌ துவங்குவதற்கான விழா 06.04.2022 அன்று நடைபெற்றது.



இவ்விழாவில்‌ தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌.வெ.கீதாலட்சுமி‌ தலைமையேற்று அடிகல் நாட்டி, அதன்பின்‌ காட்சிக்கூடத்துடன் கூடிய பயிர்‌ பூஸ்டர்கள்‌ விற்பனையாகக் கட்டிடத்தைத் திறந்து விற்பனையைத் துவக்கிவைத்தார்‌.



இவ்விழாவானது முனைவர்‌.சி.ஆர்‌.சின்னமுத்து, இயக்குநர்‌ (பொறுப்பு) பயிர்‌ மேலாண்மை இயக்குனரகம்‌ மற்றும்‌ முனைவர்‌.எம்‌.கே.கலாராணி, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, பயிர்வினையியல்‌ துறை அவர்களால்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில்‌ பல்கலைக்கழகத்தின்‌ இயக்குநர்கள்‌, கல்லூரி முதல்வர்கள்‌, துறைத்தலைவர்கள்‌, விஞ்ஞானிகள்‌, ஆராய்ச்சியாளர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்‌.

Newsletter