வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆசையா? 'காளான் வளர்ப்பு' பயிற்சிக்கு உடனே கோவை த.வே.பல்கலைக்கழகத்தை அணுகுங்கள்..!

வரும்‌ ஏப்ரல்‌ 5-ஆம்‌ தேதி அன்று (05.04.2022) தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் காலை 10-மணி முதல்‌ மாலை 5-மணி வரை காளான்‌ சாகுபடி பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில் ஒவ்வொரு மாதமும்‌ 5-ஆம்‌ தேதி அன்று காளான்‌ வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. (5ஆம்‌ தேதி விடுமுறை என்றால்‌ அடுத்து வரும்‌ வேலை நாளில்‌ பயிற்சி வாங்கப்படும்‌).

காளான்‌ சாகுபடி பயிற்சி வரும்‌ மாதம்‌ ஏப்ரல்‌ 5-ஆம்‌ தேதி அன்று (05.04.2022) (காலை 10 மணி முதல்‌ மாலை 5 மணி வரை) காளான்‌ சாகுபடி பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள்‌ நேரடியாக துறைக்கு வந்து பயிற்சிக் கட்டணமாக ரூ.590/- (18 சதவீதம் வரி கட்டணம்‌ உட்பட) செலுத்தி பயிற்சிக்குப் பதிவு செய்து பயிற்சி திட்டத்தில்‌ பங்கேற்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு:-

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

பயிர்‌ நோயியல் துறை,

தமிழ்நாடு வேளாணர்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைப்பேசி - 0422 - 6611336

மின்னஞ்சல்‌ - [email protected]

Newsletter