கோவை ஆனைமலையில் மரக்கன்று நடுதலில் ஈடுபட்ட வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள்..!

உலக வன தினத்தைக் கொண்டாடும் வகையில், ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: உலக வன தினத்தைக் கொண்டாடும் வகையில் கோவை ஆனைமலையில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக வன தினத்தைக் கொண்டாடும் வகையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, மாணவர்களுக்கு மரங்கள் குறித்தும் காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவர்கள் சார்பில் வேம்பு, பாதாம், நெல்லி மற்றும் நாவல் மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமையேற்று நடத்தினார்.

Newsletter