கோவை அன்னூர் கிராம மக்களுக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தென்னை டானிக் பயன்பாடு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் குழு பயிற்சி..!

மாணவிகள் தென்னை மரத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் தொழில்நுட்பமான தென்னை டானிக் கொண்டு மக்களுக்கு செயல்விளக்கம் செய்து காட்டினர்.


கோவை: கோவை அன்னூர் கிராம மக்களுக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தென்னை டானிக் பயன்பாடு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் குழு பயிற்சி அளித்தனர்.



கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளின் 11 பேர் கொண்ட குழுவினர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் 75 நாட்கள் அன்னூரில் தங்கி உள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, மாணவிகள் தென்னை மரத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு தொழில்நுட்பமான தென்னை டானிக் கொண்டு செயல்விளக்கம் செய்து காட்டினார்.

தென்னை டானிக் என்பது வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய திரவமாகும்.

செயல்முறை:

மரத்தின் அடி பகுதியிலிருந்து 2 அல்லது 3 அடி தொலைவில் 1 அடி ஆழத்தில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும். பென்சில் தடிமனுள்ள இளஞ்சிவப்பு வேரை தேர்வு செய்து சற்று சாய்வாக சீவிட வேண்டும்.

சீவிய வேரை 200 மி.லி டானிக் பையில் நுழைத்து நூல் கட்ட வேண்டும். ஆறு மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரண்டு முறை 200 மிலி/பனைக்கு டானிக்கை வேர் வழியே ஊட்டவும்.

பயன்கள்:

குறும்பை உதிர்வதைக் குறைக்கிறது.

தேங்காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவை அதிகரிக்கிறது.

விளைச்சலை 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இலைகளின் ஒளிச்சேர்க்கைத் திறனை மேம்படுத்துகிறது.

Newsletter