'ஆப்' இன்றி அமையா உலகு: கோவையில் 'உழவன் செயலி' குறித்து செய்முறை விளக்கம் அளித்த வேளாண் பல்கலைகழக மாணவர்கள்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள் 11-பேர் அடங்கிய குழு, கோவை மாவட்டம் ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உழவன் செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள், விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடுகளை எடுத்துக்கூறினர்.



விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மணிவாசகம் உடனிருந்தார். விவசாயிகள் ஆர்வத்துடன் மாணவர்கள் உடன் கலந்துரையாடினர்.

Newsletter