கோவை ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்..!

இதில் கலந்து கொண்ட ஆத்துப்பொள்ளாச்சி கிராம பொது மக்கள், ஆர்வத்துடன் தங்கள் கிராமத்தின் அமைப்பு விவரங்களை வரைபடங்கள் வாயிலாக அறிந்து கொண்டனர்.



கோவை: கோவை ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் இளங்கலை வேளாண்மை படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் அடங்கிய குழு, கோவை மாவட்டம் ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் கிராம மக்களின் பங்களிப்புடன் அக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள், நீர் நிலைகள், வங்கிகள், பள்ளிகள் போன்ற பொது இடங்கள் அடங்கிய சமூக வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு, சப்பாத்தி வரைபடம் மற்றும் தினசரி வேலை அட்டவணை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கலந்து கொண்ட ஆத்துப்பொள்ளாச்சி கிராம பொது மக்கள், ஆர்வத்துடன் தங்கள் கிராமத்தின் அமைப்பு விவரங்களை வரைபடங்கள் வாயிலாக அறிந்து கொண்டனர்.

Newsletter