'கிராம தங்கல் திட்டம்'- ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 11-பேர் அடங்கிய குழு ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: வேளாண் பல்கலை மாணவர்கள், கிராமங்களில் வேளாண் அனுபவ பயிற்சி பெற்றனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 11-பேர் அடங்கிய குழு ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆனைமலை கிராமத்தில் மக்களின் உதவியுடன் அங்குள்ள பள்ளிகள், நீர்நிலைகள், கூட்டுறவுச் சங்கம் போன்ற பொது இடங்களை அடையாளப் படுத்தி சமூக வரைபடம், சப்பாத்தி வரைபடம் போன்றவற்றை வரைந்து கிராம மதிப்பீட்டில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஆர்வத்துடன் கிராமத்தின் வளர்ச்சியையும் குறைகளையும் அறிந்து கொண்டனர்.

Newsletter