பொள்ளாச்சி அருகே தென்னை விவசாயிகளுக்கு விளக்குப்பொறி நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகள் சார்பில் விளக்கம்

இதில் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 11-மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பொறிகளை (trap) பற்றி விளக்கினார்கள்.


கோவை: பொள்ளாச்சி அருகே தென்னை விவசாயிகளுக்கு விளக்குப்பொறி நன்மைகள் குறித்து வாணவராயர் கல்லூரி மாணவிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகேயுள்ள தேவனூர் புதூர் கிராமத்தில் நேற்று வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில், தென்னை விவசாயிகளுக்குத் தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளைப் பிடிப்பதற்காக விளக்குப் பொறி அமைப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 11-மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பொறிகளை (trap) பற்றி விளக்கினார்கள்.

தென்னை மரத்தின் முக்கிய பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, வெள்ளை ஈ, செம்பான் சிலந்தி அவற்றைத் தடுக்கும் முறைகளான, ஆமணக்கு புண்ணாக்கு பொறி, இன கவர்ச்சி பொறி, எல்லோ ஸ்டிக்கி டிராப் அவற்றின் பயன்கள் இதன் மூலம் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு இவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter