கிணத்துக்கடவில் நாட்டு தக்காளியின் விலை சரிவு.!!

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நாட்டுத் தக்காளியின் விலை சரிவு -14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.800க்கு ஏலம் எடுத்தனர். இதனால் சில தினங்களில் கடைகளில் தக்காளியின் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நாட்டுத் தக்காளியின் விலை சரிவு -14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.800க்கு ஏலம் எடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிகளில் பெய்த மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு நாட்டுத் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது.

இதனால் நாட்டுத் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ஆயிரத்து 500 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.

இதனால் கடைகளில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது, இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக மழை இல்லாததாலும், கடைகளில் தக்காளி வியாபாரம் மந்தமானதால் இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நடந்த ஏலத்தில் தக்காளி விலை சரிவு ஏற்பட்டது.



14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி 800 ரூபாய்க்கு ஏலம் போனது, இதனால் சில தினங்களில் கடைகளில் தக்காளியின் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter