கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நாட்டுத்தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு..!

விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், கடைகளில் தக்காளியின் விலை 100 ரூபாய் மேல் விற்பனை செய்வதால் மக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நாட்டுதக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவு நாட்டு தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக தக்காளி அழுகியும், வெடிப்பு ஏற்பட்டு பாதிப்படைந்தது.

இதனால் கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு நாட்டு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து காணப்படுகிறது. வரத்து குறைந்த காரணத்தால் நாட்டுத்தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் 14 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தாளி ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.



விலையேற்றம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், கடைகளில் தக்காளியின் விலை 100 ரூபாய் மேல் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

Newsletter