தேங்காய் மற்றும் கொப்பரை விலை –வேளாண் பல்கலை., கணிப்பு!

தேங்காய்‌ மற்றும்‌ கொப்பரையின்‌ விலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலையாக இருக்கும்‌ என்று வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.


கோவை: தேங்காய்‌ மற்றும்‌ கொப்பரையின்‌ விலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலையாக இருக்கும்‌ என்று வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:-

உலகளவில்‌ தேங்காய்‌ உற்பத்தி செய்யும்‌ நாடுகளில்‌ இந்தோனேசியா, பிலிப்பைனீஸக்கு அடுத்தப்பபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில்‌ உள்ளது. தேசிய தோட்டக்கலைவாரியம்‌ 2020-21ஆம்‌ ஆண்டின்‌ முதல்‌ முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, தேங்காய்‌ 21.89 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 14625 மில்லியன்‌ தேங்காய்‌ உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இந்தியாவில்‌ தேங்காய்‌ உற்பத்தியில்‌ கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும்‌ ஆந்திரா ஆகிய மாநிலங்கள்‌ 93 சதவீதத்திற்கு மேல்‌ பங்குவகிக்கின்றன. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகள்‌, ஐக்கியநாடுகள்‌, ஈரான்‌ மற்றும்‌ கத்தார்‌ ஆகிய நாடுகளுக்கு அதிகளவு தேங்காய்‌ ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில்‌ 2019 20ஆம்‌ ஆண்டில்‌ 33.11 இலட்சம்‌ டன்கள்‌ தேங்காயானது 3.95 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தஞ்சாவூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ கன்னியாகுமரி ஆகியவை தேங்காய்‌ உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தற்போது பெரும்பாலான கொப்பரை வரத்தானது பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்‌,பொள்ளாச்சி, சேலம்‌, காங்கேயம்‌, மைசூர்‌ (கர்நாடகா) மற்றும்‌ திருப்பதி (ஆந்திரபிரதேசம்‌ ஆகிய இடங்களிலிருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. முந்தைய பருவத்தை ஒப்பிடுகையில்‌ இப்பருவத்தில்‌ கொப்பரையின்‌ வரத்தானது அதிகமாக உள்ளது. நல்ல பருவமழை காரணமாகதேங்காய்‌ உற்பத்தி மற்றும்‌ வரத்து அதிகரித்துள்ளது. வரும்‌ மாதங்களிலும்‌ இது தொடரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தமிழ்நாடு பாசனவிவசாய மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ இயங்கிவரும்‌, வேளாண் மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, கடந்த 21 ஆண்டுகளாக ஈரோட்டில்‌ உள்ள அவல்‌ பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம்‌ மற்றும்‌ பெருந்துறை வேளாண்‌ உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்திலும்‌ நிலவிய தேங்காய்‌ மற்றும்‌ கொப்பரை விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவின்‌ அடிப்படையில்‌ நவம்பர்‌ டிசம்பர்‌ 2021 வரை தரமான தேங்காயின்‌ பண்ணை விலை கிலோவிக்கு ரூ.25 முதல்‌ ரூ 27 வரை இருக்கும்‌ மற்றும்‌ நல்லதரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.100 முதல்‌ ரூ.102 வரை இருக்கும்‌ என அறியப்படுகிறது. ஏனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌

வேளாளர்‌ மற்றும்‌ ஊரகமேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641003.

தொலைப்பேசி -0422-2431405

தொழில் நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

வாசனை மற்றும்‌ மலைத் தோட்ட பயிர்கள் துறை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌-641003.

தொலைப்பேசி -0422-6611284

Newsletter