கிணத்துக்கடவு சந்தையில் நாட்டு தக்காளியின் விலை கிடுகிடு என உயர்வு- ஒரு கிலோ 26-ரூபாய்க்கு ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி.!!

தக்காளியின் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அன்றாடும் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு நாட்டுத் தக்காளி வரத்து குறைந்து வருவதால் நாட்டு தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தைக்கு நாட்டு தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

நாளொன்றுக்கு பத்தாயிரம் பெட்டி நாட்டுத்தக்காளி வரவேண்டிய சந்தையில், தற்போது 2-ஆயிரம் பெட்டி தக்காளி மட்டுமே வரத்து உள்ளது.



கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு நாட்டுத் தக்காளி வரத்து குறைந்து வருவதால் நாட்டு தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் 15-கிலோ எடை கொண்ட நாட்டு தக்காளி 350-முதல் 400-ரூபாய் வரை ஏலம் போனது.



இதேபோல் 15-கிலோ எடை கொண்ட ஆப்பிள் தக்காளி 400-முதல் 500-ரூபாய் வரை ஏலம் போனது.

தக்காளியின் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அன்றாடும் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter