நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆலோசனை.!!

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்குக் கோவை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட இயக்குநர் சித்ராதேவி ஆலோசனை தெரிவித்துள்ளார்.


கோவை: நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்குக் கோவை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட இயக்குநர் சித்ராதேவி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- நிலத்தைச் சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3-அல்லது 4- முறை இரும்புக்கலப்பை கொண்டு உழவேண்டும். பின்னர் 12.5-டன் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இட வேண்டும்.

ஒரு கிலோ விதையுடன் 4-கிராம் டிரைகோடெர்மா விரிடியை கலக்கவும். மேலும் உயிர் உரங்களை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். எக்டருக்கு 125-கிலோ விதையினை பயன்படுத்தவேண்டும். பெரிய விதை கொண்ட ரகங்களுக்கு விதை அளவில் 15-சதவிகித கூடுதலாக இடவேண்டும்.

செடிக்குச் செடி 10-செ.மீ இடைவெளியும், பாத்திக்குப் பாத்தி 30-செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். களைக் கொல்லி உபயோகிக்கவில்லை என்றால் மண்வெட்டி கொண்டு விதைத்த 20-மற்றும் 40-ம் நாள் களை எடுக்க வேண்டும். விதைத்த 3-ம் நாள் களை முளைக்கு முன் ‘ஆக்ஸிப்ளோர்பென்’ எக்டருக்கு 200-கிலோ தெளிக்கவும்.

தண்ணீர் கிடைக்கும் தன்மை, நிலச் சரிவு மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து 10-மீட்டர் முதல் 20-மீட்டர் அளவிற்குப் படுக்கைகள் அமைக்கவும். பெரிய பருப்புகள் கொண்ட ரகங்களில், காய்களின் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். இதைத் தவிர்க ஊட்டச்சத்துக்களைக் கலந்து தெளிக்கவேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர்பாய்ச்சத் தேவையில்லை. இதுபோன்ற தொழில்நுட்ப முறைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

Newsletter