ஆழியார் அணையிலிருந்து நடப்பாண்டில் 90 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும்; ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை!

கோவை: கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து நடப்பாண்டு அறு சுற்று வீதம் 90 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது ஆழியார் அணை.

இங்கிருந்து ஆண்டுதோறும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 380 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றுவருகின்றன. குறிப்பாக இங்கு 70 சதவீத விழுக்காடு நீண்ட நாள் பயிரான தென்னை விவசாயம்,20 விழுக்காடு நெல் சாகுபடி, மீதமுள்ள பகுதிகளில் நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற சாகுபடிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆழியார் அணையில் உள்ள தண்ணீரின் அளவைப் பொருத்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.ஆனால் தற்போது தொடர் மழைக்காரணமாக ஆழியார் அணை நிரம்பி உள்ளது.



இந்த சூழலில் தான், இன்று பொள்ளாச்சியில் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆறு சுற்று விதம் 90 நாட்களுக்கு 2,880 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கிளை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி கால்வாய்களைத் தூர்வார வேண்டும் எனவும் பாசனச் சபை சங்கங்களுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இந்த விவசாயிகளின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter