பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..!

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.72 உடனடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாகும்.


திருப்பூர்: பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 55,000 விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில், பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 47,117 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கால்வாயில் 400 கன அடியும், ஆற்றிலே 800 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் 135 நாட்களுக்கு திறக்கப்படும். உரிய இடைவெளிவிட்டு 20.9.21 முதல் 02.02.2022 வரை 4,536 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.72 உடனடியாக உள்ளது அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாகும்.

Newsletter