தேனி வளர்ப்பிலும் ஊழல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள்; தரமில்லாத தேனீ பெட்டிகளால் மகசூல் இல்லாமல் விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தரமில்லாத தேனீ பெட்டிகள் தயாரிப்பதால் மகசூல் பாதிப்பு ஏற்படுவதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த தேனீ விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு தேனீ வளர்ப்பாளர்களுக்குகென தேனீ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் அனைத்து வயதினரும் இன்றைக்கு தேனீ வளர்ப்பில் அதிக ஈடுபாட்டு காட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பாளர்கள் தேனீக்களை வளர்ந்து நல்ல மகசூல் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக விவசாயிகள் நண்பனாகக்ச கருதப்படும் தேனீக்களால் மகரந்தச் சேர்க்க ஏற்பட்டு 25 சதவீத மகசூல் அதிகரிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்படி ஆர்வத்துடன் தேனீக்கள் வளர்ப்பவர்களுக்காக தேனீ பெட்டிகள் அனைத்தும் தோட்டக்கலை துறை மற்றும் தேசியத் தோட்டக்கலை இயக்கத்திட்டம் வாயிலாக வழங்கி வருகிறது. இதற்கான டென்டர்களை பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தம் எடுத்து விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்குகின்றன. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.



குறிப்பாக தேனீ பெட்டிகளுக்கான டென்டரை பெரிய நிறுவனங்கள் எடுத்துள்ள நிலையில், மக்களைக் கருத்தில் கொள்ளாமல் லாப நோக்குடன் செயல்பட்டு தரமில்லாத தேனீ பெட்டிகள், மற்றும் அதைச் சார்ந்த உபகரணங்கள் தயாரிக்கின்றது. இதனால் இதனை வாங்கி தேனீ வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் முறையாக மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் தேன் மகசூலும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதோடு மட்டுமின்றி மக்களுக்குத் தரமான தேன் வழங்க முடியாத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.



எனவே இதுப்போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக, தமிழக அரசு தேனீ வளர்ப்பாளர்களுக்கு என தேனீ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் எனவும், தேனீ கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் தேனீ வளர்ப்பாளர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதற்காக இலவசப் பயிற்சிகளை அறிவிக்க வேண்டும் என்றும் தேனீ வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter