வால்பாறையில் மகளிருக்கான தேனி மற்றும் காளான் வளர்ப்பு மற்றும் இனிப்பு தயாரித்தல் பற்றி தொழில் பயிற்சி முகாம்.!!

கோவை: வால்பாறையில் மகளிருக்கான தேனி மற்றும் காளான் வளர்ப்பு மற்றும் இனிப்பு தயாரித்தல் பற்றி தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் மகளிருக்கான தேனி மற்றும் காளான் வளர்ப்பு மற்றும் இனிப்பு தயாரித்தல் பற்றி தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் மகளிருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகத் தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.



வால்பாறை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமிற்குத் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். கோவை வடவள்ளி ராமசாமி சின்னம்மாள் டிரஸ்ட் சார்பில் காளீஸ்வரி வீட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளான லட்டு வகைகள், சாக்லேட் வகைகள், மில்க் பிஸ்கட் வகைகள் மாற்றம் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி மகளிர் சுய உதவிக் குழுவினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உதவி திட்ட அலுவலர் தெய்வம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுகி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter