கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை கள அனுபவ பயிற்சி!

கோவை: கோவை காருண்யா பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள்‌ ஊரக வேளாண்மை கள அனுபவ பயிற்சி செயல்‌ விளக்கம்‌ நிகழ்ச்சி முண்டந்துறையில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை காருண்யா பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள்‌, ஊரக வேளாண்மை கள அனுபவ பயிற்சி செயல்‌ விளக்கம்‌ நிகழ்ச்சி முண்டந்துறையில்‌ நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மண்புழு உரம்‌ தயாரிக்கும்‌ செயல்முறை அங்கு வந்துள்ள விவசாயிகளுக்கு மாணவர்கள்‌ செய்துக்காட்டினர்‌. ஆர்கானிக்‌ விவசாயம்‌ ஊக்குவிக்கவும்‌, விவசாயிகளுக்கு வருவாய்‌ பெருக்கவும், அதில்‌ வரும்‌ மண்புழு உரத்தின் நன்மைகளும்‌, அதிகப்படி உற்பத்தி செய்து வெளியில்‌ விற்கவும்‌ செயல்முறை வாயிலாக காருண்யா பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களான தமிழ்ச்செல்வன்‌, பிரகதீஸ்‌, பிரவீன்‌, அர்யக்‌, வருண்‌ குமார்‌ ஆகியோரால்‌ பேராசிரியர்கள்‌ டாக்டர்‌ ஜெனிடா தினகரன்‌, டாக்டர்‌ சின்னசாமி, டாக்டர்‌. ராஜேந்திரன்‌, டாக்டர்‌ லிடியா, டாக்டர்‌ சீமந்தினி ஆகியோர்‌ முன்னிலையில்‌ விவசாய பெருமக்களுக்கு செயல்விளக்கம்‌ அளிக்கப்பட்டது.

Newsletter