வீட்டிலிருந்தே சம்பாதிக்க வால்பாறையில் மலைவாழ் மக்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி.!!

கோவை: வால்பாறையில் மலைவாழ் மக்களுக்குக் காளான் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி மகளிர் நலத்திட்டம் சார்பில் அளிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் மலைவாழ் மக்களுக்குக் காளான் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி மகளிர் நலத்திட்டம் சார்பில் அளிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பழங்குடியின மக்களுக்குக் காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. வால்பாறை அட்ட கட்டியிலுள்ள மனமகிழ் மன்றத்தில் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி மகளிர் நலத்திட்டம் சார்பில் மலை வாழ் மக்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரபீக் அகமது கலந்து கொண்டு பயிற்சியைத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் கோமதி காளான் வளர்ப்பு பற்றி மகளிருக்குப் பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் நகராட்சி சமுதாய ஒருங்கிணைப்பாளர் வாசுகி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பழங்குடியின மக்கள் மகளிர் கலந்து கொண்டனர்.

Newsletter