கிணத்துக்கடவில் நுண்ணீர் பாசனத் திட்டம் ஆவணங்கள் பெறும் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்..!

கோவை: பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் கோவை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 150 ஹெக்டேர் பரப்பளவில் மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.


கோவை: பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் கோவை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 150 ஹெக்டேர் பரப்பளவில் மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 75 விழுக்காடு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கான சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று போன்ற ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கடந்த மாதம் 24-ஆம் தேதி கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற முகாமில் கலந்து கொள்ள முடியாத விவசாயிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, வேளாண்மை துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி மற்றும் வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஆனந்த் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



வேளாண்மை, தோட்டக் கலைத் துறை, ஆத்மா திட்டம், உழவர் நலத் துறை மற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டுவந்த ஆவணங்களை சரிபார்த்து சொட்டுநீர் பாசனம் அமைக்கத் தேவையான ஆவணங்களை வழங்கினர்.

மேலும், விவசாயிகள் விரும்பும் நிறுவனங்கள் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Newsletter