தென்மேற்கு பருவமழை காரணமாக கிணத்துக்கடவில் மானாவாரி சாகுபடிக்கு உழவுப் பணிகள் தீவிரம்..!

கோவை: அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வந்ததின் காரணமாக கிணத்துக்கடவில் மானாவாரி சாகுபடிக்கு உழவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை: அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வந்ததின் காரணமாக கிணத்துக்கடவில் மானாவாரி சாகுபடிக்கு உழவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், பருவமழை காரணமாக வறண்டு கிடந்த விளை நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்ததால், மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வதற்காக டிராக்டர் மூலம் விளைநிலத்தில் உழவு செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை போன்றவை இந்தப் பருவமழையால் சாகுபடி செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter