பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் வரும் 27ம் தேதி சிறு குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் - வேளாண் அதிகாரிகள் தகவல்!

கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் சிறு குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்க உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் சிறு குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்க உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் வரும் 27 ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக முன்கூட்டியே விவசாயிகள் இணையத்தில் விண்ணப்பிக்க தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இந்தாண்டு நுண்நீர் பாசன திட்ட பெற 2,155 ஹெக்டருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் நில ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இப்பதிவுக்கு சிட்டா, அடங்கல், புலவரைபடம் மற்றும் சிறு குறு விவசாயி என்னும் சான்று ஆகியன தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணங்களை வருவாய் துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை ஆகியன இணைந்து விவசாயிகளுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

இதற்கான முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்வட்டங்களிலும் வரும் 27 மற்றும் ஆகஸ்டு மாதம் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. பொள்ளாச்சி வருவாய் உட்கோட்டத்தில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் பொள்ளாச்சி, நெகமம், ராமபட்டினம் உள் வட்டங்களில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், கிணத்துக்கடவு தாலுகாவில் வடசித்தூர், கோவில்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களிலும், ஆனைமலை உள்வட்டத்தில் ஆனைமலை, மார்ச்சநாய்க்கன்பாளையம் மற்றும் கோட்டூர் உள்வட்டங்களிலும் 27 ம் தேதி முகாம் நடைபெறுகிறது.

இதற்காக சிறு, குறு விவசாயிகள் சான்று தேவைப்படுவோர் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நுண் நீர்ப் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை உதவி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter