வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் களை மருந்து அடிக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் களை மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் களை மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. வால்பாறை பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வந்தது தற்பொழுது தேயிலை வளர்ச்சிக்கு தேவையான வெயில் அடித்து வருகிறது.

இதன் காரணமாக தேயிலை செடிகளின் இடையே களைகள் அதிகம் வளர்ந்து காணப்பட்டது. தேயிலை செடிகளுக்கு இடையில் களைகள் அதிகம் வளர்வதால் தேயிலை செடிகளின் வளர்ச்சி பாதிப்படையும்.



எனவே, இதனை கருத்தில் கொண்டு தேயிலைத் தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளுக்கு இடையே உள்ள களைகளை அழிக்க களைக் கொல்லி மருந்தினை கைத்தெளிப்பான் மூலம் தொழிலாளர்கள் தெளித்து கலைகளை அழித்து வருகின்றனர்.

மேலும், காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளில் களைக்கொல்லி மருந்தை தொழிலாளர்கள் தெளித்து வருகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.

Newsletter