தென்னையில் இளநீர் மகசூல் குறைந்ததால் இளநீர் விலை அதிகரிப்பு - சில்லறை விலை ரூ.40-45 ஆக உயர்வு!

கோவை: தென்னையில் இளநீர் மகசூல் குறைந்ததால் இளநீர் விலை அதிகரித்துள்ளதாக பொள்ளாச்சி வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: தென்னையில் இளநீர் மகசூல் குறைந்ததால் இளநீர் விலை அதிகரித்துள்ளதாக பொள்ளாச்சி வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தென்னை நகரம் என்று அழைக்கப்படும், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளூர் மடகுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டில், இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், கடந்த ஜனவரி மாதம் வரையிலும் தோட்டங்களில் இளநீர் ஒன்று ரூ.17 முதல் அதிகபட்சமாக ரூ.20க்கே கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பின், கோடை வெயிலின் தாக்கத்தால் இளநீருக்கு கிராக்கி அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதம் இளநீர் அதிகபட்சமாக ரூ.33 வரை பண்ணை விலையாக இருந்தது.



இருப்பினும், ஏப்ரல் மாதம் இறுதி முதல் வெவ்வேறு கட்டமாக ஊரடங்கால் பல வாரமாக இளநீர் அறுவடை குறைந்ததுடன், விற்பனை மிகவும் மந்தமானதால் இளநீர் விலை ரூ.28 ஆக சரிந்தது.



இந்நிலையில், தற்போது தென்னையில் இளநீர் மகசூல் குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அறுவடை செய்யப்படும் இளநீர் உடனுக்குடன் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், அதன் தட்டுப்பாடு அதிகமானது. இதனால், தற்போது தோட்டங்களில் ஒரு இளநீர் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், ரூ.40 முதல் ரூ.45 வரையில் சில்லறை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter