வேளாண் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு ஆனைமலையில் களப்பயிற்சி!

ஆனைமலை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ஆனைமலையில் களப் பயிற்சி அளிக்கப்பட்டது.


ஆனைமலை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ஆனைமலையில் களப் பயிற்சி அளிக்கப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆனைமலை வட்டார வருவாய் கிராமங்களில் களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் இருந்து கள வேளாண் பணி அனுபவங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்தனர். விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் எடுத்துக் கூறினர். ஆனைமலையில் தென்னை விவசாயிகளுக்கு, TNAU தென்னை டானிக் குறித்து மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தார்கள்.

அப்போது மாணவர்கள் கூறுகையில், ஒரு வருடத்திற்கு இரண்டு முறை ஆறு மாத இடைவெளியில் ஒரு மரத்திற்கு 200மி.லி டானிக்கை வேர் ஊட்டமாக அளிப்பதன் மூலம் தென்னையில் மகசூல் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும். குரும்பை கொட்டுதல், நோய் மற்றும் பூச்சி பாதிப்பு குறையும்,” என்று தெரிவித்தனர்.

Newsletter