கோவை வேளாண்பல்கலையில் 18, 19ம் தேதிகளில் காய்கறி, பழ பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை: கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் வணிக ரீதியிலான காய்கறி, பழ பொருட்கள் தயாரிப்பு குறித்து வரும் 18 மற்றுனம் 19ம் தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கோவை: கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் வணிக ரீதியிலான காய்கறி, பழ பொருட்கள் தயாரிப்பு குறித்து வரும் 18 மற்றுனம் 19ம் தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“வணிக ரீதியிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் பொருட்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் இரு நாட்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் நீரிழப்பு காய்கறிகள் மற்றும் பழங்கள், பழக்கலவை பழ ஜாம், ஸ்குவாஷ், பரிமாறுவதற்கு ஏற்ற பானங்கள், ஊறுகாய்கள், தக்காளி கெட்ச் அப், பழமிட்டாய் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க ரூ.1500 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி 18% சேர்த்து பேராசிரியர் மற்றும் தலைவர், சிபிஎச்டி, கோவை (Professor and Head, CPHT payable at Coimbatore)என்ற பெயரில் வரைவோலை எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைப் பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0422-6611268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter