பனிப்பொழிவால், கோவையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

கோவை: பனிப்பொழிவு காரணமாக கோவையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி விலை, ஒரே நாளில், 100 ரூபாய் உயர்ந்துள்ளது.


கோவை: பனிப்பொழிவு காரணமாக கோவையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி விலை, ஒரே நாளில், 100 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு முக்கியப் பயிராக தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை பூலுவம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி 420 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 100 ரூபாய் விலை அதிகரித்து 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஜனவரி மாதம் பெய்த மழை காரணமாக, பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால், தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், தக்காளி விலை மேலும் உயரும்' என்றனர்.

Newsletter