மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க கோவை விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை: மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க கோவை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



கோவை: மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க கோவை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில், 2020-21ம் ஆண்டுக்கான சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் 75 மற்றும் 100 சதவீத மானியத்துடன் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசால் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் 12.5 ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, சொட்டு நீர் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

விருப்பமான நிறுவனத்தை, விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், விவசாயிகள், http://tnhorticulture.tn.gov.in/horti/newmim/ à®¨à¯à®£à¯à®£à¯€à®°à¯ பாசன மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளத்தில், தாமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விருப்பமான நுண்ணீர் பாசன நிறுவனம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter