மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன? - கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி

மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன? - கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி


கோவை: மத்திய அரசு பட்ஜெட் தாக்கலின் போது விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாவட்டதலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

√ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் கோரிக்கை என்பது பல்வேறு ஆண்டுகளாக விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கையாகும்.

√ தற்போது, செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

√ விவசாயிகள் விளைபொருள் விலை நிர்ணயத்தில் முனைவர் எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்திட வேண்டும்.

√ விவசாயிகளுக்கு வயது முதிர்வின் போது மாதம் ரூ .5000 பென்சன் வழங்கப்பட வேண்டும்.

√ கோவையில் தென்னை, பாக்கு விளை பொருள் ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட வேண்டும்.

√ பாரம்பரிய பயிர் வகைகளை ஊக்குவிப்பதுடன் இயற்கை வேளாண்மையை பாதுகாக்க வேண்டும்.

√ அரசு திட்டங்கள் நிறைவேற்றும் போது விவசாய நிலங்கள், குடியிருப்புகள்,

தொழிற்சாலைகள் போன்றவைகள் பாதிக்காத வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

√ வனவிலங்குகள் வாழும் இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

√ வன விலங்குகள் மூலம் ஏற்படுகிற உயிர் சேதம், பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து உடனடியாக இருமடங்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி கூறினார்.

Newsletter