கோவைக்கு பெருமை சேர்த்துள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தமிழக அரசு விருது; 11 கோடி வருமானம்..!

கோவைக்கு பெருமை சேர்த்துள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு à®¤à®®à®¿à®´à®• அரசு விருது; 11 à®•ோடி வருமானம்..!



கோவை: கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது, மிகுந்த பெருமிதம் மற்றும் உற்சாகம் அளிப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனர். 

இன்று, கோவை ஆடிஸ் வீதியில் உள்ள செய்தியாளர்கள் கூட்டரங்கில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் விவசாயிகள் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய அவர்கள், இந்த ஆண்டு குடியரசு தினம் விழாவில் ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. இது தொண்டாமுத்தூர் விவசாயிகள் கோவைக்கு தேடித்தந்த பெருமை, என்றனர். 

வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வழிகாட்டுதலின்படி கடந்த 2013 -ஆம் ஆண்டு, கோவையில் தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் குறுகிய காலங்களில் பல சாதனைகளை புரிந்துள்ளது. 

38 சதவீதம் பெண் விவசாயிகள்

இந்த நிறுவனத்தில், 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 38 சதவீதம் பெண் விவசாயிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 70% சிறு மற்றும் குறு விவசாயிகள் இதில் செயல்பட்டு வருகின்றனர். பொதுவாக விவசாயிகள் à®…வர்களது உற்பத்திக்கு

விலை நிர்ணயிக்க தடுமாறி வரும் நிலையில், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களின் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்து லாபம் ஈட்டி à®µà®°à¯à®•ின்றனர்.

இடைத்தரகர்கள் இன்றி விற்பனை

இதன் மூலம் இடைதரகர்கள் இன்றி, அவர்கள் விவசாய à®¨à®¿à®²à®™à¯à®•ளில் விளையும் à®¤à¯‡à®™à¯à®•ாய், காய்கறி, பழங்கள் ஆகியவற்றை நேரடியாக விற்பனை செய்கின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பலன் பெற்று வருகின்றனர். இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள தொண்டாமுத்தூர் மட்டும் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் முன்பை விட பல மடங்கு வருமானம் ஈட்டி வருவதாக, தெரிவிக்கின்றனர். 



2019 - 2020 ஆண்டு 11 கோடி வருமானம்

கடந்த ஆண்டு மட்டும் 2019 - 2020 இல் மட்டும் 11 கோடி ஆண்டு வருமானம் ஈட்டி சாதனை புரிந்துள்ள இந்த நிறுவனம், தமிழகத்தின் முன்னோடி உழவர் உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்கிறது. 

தமிழக அரசு விருது

இதை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த உழவர் உற்பத்தியாளர் விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் வழங்கியுள்ளார்.

இந்த விருது மாநில அளவில் வழங்கக்கூடிய விருதாகும். இது கோவை மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டில் அவுட்லுக் வேளாண் மாநாட்டில் தேசிய அளவில் சிறந்த FPO என்ற விருதினை மத்திய வேளாண் அமைச்சர் நம் நிறுவனத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது",இவ்வாறு செய்தியாளர்களிடம் வெள்ளியங்கிரி à®‰à®´à®µà®©à¯ à®‰à®±à¯à®ªà®¤à¯à®¤à®¿à®¯à®¾à®³à®°à¯ நிறுவனத்தினர் à®¤à¯†à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à®©à®°à¯.

Newsletter