விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பாக 11 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பாக 11 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு


கோவை: தமிழக விவசாய பெருமக்களின் வாழ்க்கை தரம் உயர, அவர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு வருகிறது.

இவ்வருடம், பொங்கல் பரிசாக 11 புதிய ரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த பயிர் ரகங்களை வேளாண்மைத்துறை முதன்மை செயலர், வேளாண்மைத்துறை இயக்குநர், தோட்டக்கலைத்துறை இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல அதிகாரிகள் முன்னிலையில் 51-வது மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கிகரிக்கப்பட்டு, குழுவின் ஒப்புதலுடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில், 6 வேளாண் பயிர்கள், 4 தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் வனப்பயிர் ஒன்றும் அடங்கும். நெல் - கோ 54, விஎம்ஆர் (கத்திரி) 2, நெல் - ஏடிடீ 55,பாலில்லா பழா பிஎல்ஆர் 3, நெல் - டிஆர்ஒய் 4,குடம்புள்ளி பிபிஐ(கு) 1, கேழ்வரகு ஏடிஎல் 1,விளாம்பழம் டபில்யுஎப்எல் 3, வரகு ஏடிஎல் 1,

மலைவேம்பு எம்டிபி 3, உளுந்து கோ 7 ஆகியவை இந்த பயிர்கள் ஆகும்.

இது குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர், குமார் கூறுகையில்,‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகம் கடந்த நூறு வருடங்களில் 854 ரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் பதினொரு புது ரகங்களை வெளியிடுகிறது. விவசாயிகள் இந்த புது ரகங்களை பயிரிட்டு நன்மைகளை பெற வேண்டும்,’’ என்றார்.

Newsletter