வேளாண்மைப் பல்கலைக்கழ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு சி.பொன்னையன் பாராட்டு!

கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியை பாராட்டிய மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவர் சி.பொன்னையன் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.


கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியை பாராட்டிய மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவர் சி.பொன்னையன் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு வழங்கிய 50 கோடிக்கான தமிழ்நாடு புதுமைத் தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டத்தை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்காக முன்னாள் நிதியமைச்சரும், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவருமான சி.பொன்னையன் கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் வரவேற்றார்.



நானோ தொழில்நுட்ப ஆய்வகம், பயிர் பின் செய் நேர்த்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல் ஆய்வகம், அதிநவீன பூச்சி அருங்காட்சியம், தென்னை திசு வளர்ச்சி ஆய்வகம், அங்கக இடுபொருள்கள் கண்காட்சி, தீவனப் பயிர்கள் உருண்டைகள் தயாரிப்பு, விரைவு உரக்கழிவு தயாரிப்பு தொழில்நுட்பம், அடர் நடவுமுறையில் மா வளர்ப்பு, மூங்கில் ஆக்சிஜன் பூங்கா, சிறுகுறிஞ்சான், உயிரியல் துரிதமுறை உயிரணுக் கூறுபிரித்தெடுத்தல், புதுப்பொலிவு பெறும் தாவரவியல் பூங்கா, ரைசோட்ரான் என்ற வேர் ஆராய்ச்சியகம் மற்றும் சிறுதானியப் பயிர் உற்பத்தி மையம் போன்றவற்றை பொன்னையன் மேற்பார்வையிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மற்றும் ஈடுபாட்டைப் பாராட்டினார்.

மேலும் அப்போது அவர் கூறுகையில், `ஆராய்ச்சி உற்பத்தித்திறன் மேம்பட வேளாண் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் நெறிமுறைப்படுத்த வேண்டும். தனியார் துறையின் கூட்டு முயற்சியோடு சேர்ந்து விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டும்' என்றார்.

துணைவேந்தர் முனைவர் நீ.குமார் பேசும்போது, `இயற்கையாக சாயம் செய்யப் பயன்படும் பிக்சா, காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள் ஏ.டீ.டி. 53 மற்றும் 54, மானாவாரி மற்றும் வறட்சியில் வளரக்கூடிய மா வளர்ப்பு முறைகள், ஒருங்கிணைந்த விதை உற்பத்தி நிலையம், பழ ஈ பிடிப்பு தொழில்நுட்பம், சிறுதானிய ஆற்றல் மற்றும் மதிப்புக்கூட்டுதல், மகளிருக்கேற்ற பண்ணைக் கருவிகள் முதலியவற்றை வேளாண் விஞ்ஞானிகள், விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் செயல் விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தை பரவலாக்குவதுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் தொழில்முனைவோராக ஆகவும் ஊக்குவிக்கலாம் என்றார்.



கடந்த ஐந்தாண்டு காலத்தில் பல்வேறு பரிமாண வளர்ச்சியை இப்புதுமைத்திட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் செயல்பாட்டின் மூலம் நிலப்பரப்பளவு அதிகரித்தல், மகசூல் அதிகரிப்பு, விளைச்சல் அதிகரிப்பு மற்றும் அதிக வருமானத்துடன் சுயதொழில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக ஏதுவாக இருக்கிறது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

Newsletter