தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் உற்பத்தி ஆனையர் ஆய்வு


தமிழ்நாடு அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சுகன்தீப் சிங் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் நெல் இளவிருத்தி மையம், நன்செய் நில ஆய்வு மையம், பழத்தோட்டம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வணிக மேம்பட்டு இயக்கம், வளங்குன்றா அங்கக வேளாண்மை, பயிர் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையம், தேனீ வளர்ப்பு கூடம், பயிர் மற்றும் எண்ணெய் வித்துக்கள் துறை போன்றவற்றை பார்வையிட்டு, அந்த மையங்களில் நடைபெறும் ஆய்வுகள் குறித்தும் ஆர்வத்துடன் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடி அறிந்து கொண்டார்.



மேலும், வேளாண் பல்கலையில் உள்ள ஆய்வு வசதிகள், படிப்புகள், உழவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், வேளாண் பல்கலையில் உள்ள தொழிநுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்தும் பேராசியர்களிடம் கேட்டறிந்தார்.



இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, பதிவாளர் ஆனந்தகுமார், ஆராய்ச்சி இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் ஆய்வின் பொது உடன் இருந்தனர்.

Newsletter