தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ வெளியிடப்பட்ட இரகங்கள்‌ மற்றும்‌ ஒட்டு இரகங்களை வணிகமயமாக்கல்‌!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ இந்த வருடம்‌ வெளியிடப்பட்ட இரகங்கள்‌, ஒட்டு இரகங்களை பிரபலப்படுத்த காணொளி கண்காட்சி 19.12.2020 முதல்‌ 22.12.2020 வரை நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ இந்த வருடம்‌ வெளியிடப்பட்ட இரகங்கள்‌, ஒட்டு இரகங்களை பிரபலப்படுத்த காணொளி கண்காட்சி 19.12.2020 முதல்‌ 22.12.2020 வரை நடைபெற்றது.

ஒளிக்காட்சிகளாக 19 இரகங்கள்‌ மற்றும்‌ 8 - கலப்பினங்கள்‌ நெல்‌ - 6 இரகங்கள்‌ முறைய, DT 53, கோ — 51, கோ — 53, அண்ணா , டி. பி.எஸ்‌ - 5, MDU - 6, நெல்‌ கலப்பினம்‌ - கோஆர்ஹெச்‌ - 3, மக்காச்சோளம்‌ கலப்பினம்‌ முறையே - கோ 6, கோ ( ௧ ), M8, கோ (௧) 9, கம்பு கலப்பினம்‌ - கோ 9, சோள ரகம்‌ - கோ 32, பலமுறை அறுவடை தீவன சோளம்‌ CSV 33 MF, பல்லாண்டு தவன சோள இரகம்‌ - கோ 31, தவன தட்டைப்பயறு - கோ 9, தீவன வேலிமசால்‌ இரகம்‌ - கோ 2, பனிவரகு ரகம்‌ ATL 1, சாமை இரகம்‌ ATL 1 தினை ரகம்‌ ATL 1, தட்டைப்பயறு ரகம்‌ - கோ CP சூரிய காந்தி கலப்பினம்‌ - கோ ௧ 3, ஆமணக்கு இரகம்‌YRCH 1, வெங்காய இரகம்‌ - கோ 6, புடலை கலப்பினம்‌ - கோ ௧ 1, பருத்தி இரகம்‌ - கோ17 ஆகியவற்றின்‌ சிறப்பியல்புகள்‌ 19.12.2020 அன்று முதல்‌ இணையதள வழியாக காட்சிபடுத்தப்பட்டது. இதனுடன்‌ மேலும்‌ பல்வேறு இரகங்களைப்‌ பற்றி தெரிந்து கொள்ள https://tnau.ac.in/vsew/ sterm இணைப்பில் காணலாம்‌.

இணையவழி கருத்தரங்கு 22.12.2020 அன்று நண்பகல்‌ 3.00 மணியளவில்‌ நடைபெற்றது. இதில்‌ 67 தனியார்‌ விதை நிறுவன நிர்வாகிகள்‌ மற்றும்‌ 47 வேளாண்‌ பல்கலைக்கழக வல்லுநர்கள்‌ இணையதள வாயிலாக கலந்து கொண்டனர்‌. வணிக மேம்பாட்டு இயக்குனர்‌ முனைவர்‌ சே.தே.சிவக்குமார்‌ அவர்கள்‌ வரவேற்புரை ஆற்றினார்‌.

மேலும்‌, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககம்‌ தனியார்‌ விதை நிறுவனங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ இரகங்கள்‌ மற்றும்‌ கலப்பினஙகளை வணிகமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணை வேந்தர்‌ முனைவர்‌. ந.குமார்‌ அவர்கள்‌ தொடக்க உரை ஆற்றி கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்‌. அவரது உரையில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தில்‌ இருந்து வெளியிடப்பட்ட இரகங்கள்‌ மற்றும்‌ கலப்பினங்கள்‌ எவ்வாறு வளரிகமயமாக்கப்படுகின்றது என்பது குறித்து கூறினார்‌.

பல்கலைக்கழகத்தில்‌ வெளியிடப்பட்ட இரகங்கள்‌ மற்றும்‌ கலப்பினங்கள்‌ தமிழகத்தின்‌ பல்வேறு இடங்களில்‌ நிறைய வயல்வெளிச்‌ சோதனைகளுக்கு உட்படுவதால்‌ அவைகள்‌ நம்பிக்கைக்கு உரியனவாகும்‌. மேலும்‌ நெல்‌, மக்காச்சோளம்‌ தவிர ஆமணக்கு, சூரியகாந்தி, காய்கறி பயிர்களில்‌ சிறந்த ஒட்டு இரகஙகளும்‌, சிறுதானிய பயிர்‌ மற்றும்‌ தீவன பயிர்களில்‌ சிறந்த இரகங்களும்‌ வெளியிடப்பட்டுள்ளன எனறார்‌. தனியார்‌ மற்றும்‌ அரசு நிறுவனங்கள்‌ ஒன்றிணைந்து தரமான விதைகளை குறைந்த கால இடைவெளியில்‌ அதிகமான விவசாயிகளுக்கு கொண்டு செல்வதால்‌, விவசாயிகள்‌ அதிக இலாபம்‌ ஈட்ட ஏதுவாகிறது.

முனைவர்‌ கீதா, இயக்குனர்‌, பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மையம்‌, முனைவர்‌ புகழேந்தி, முதன்மையர்‌, தோட்டக்கலை கல்லூரி மற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌ மற்றும்‌ முனைவர்‌ சுந்தரேஸ்வரன், இயக்குனர்‌ (விதை மையம்‌) ஆகியோர்‌ இணையவழி கருத்தரங்கில்‌ கலந்துகொண்டு பல தனியார்‌ விதை நிறுவன நிர்வாகிகள்‌ மற்றும்‌ உழவர்‌ உற்பத்தி நிறுவனத்தின்‌ பிரதிநிதிகள்‌ தங்களின்‌ சந்தேகஙகளை கேட்டறிந்தனர்‌.



அவர்களுக்கு வேளாண்‌ விஞ்ஞானிகள்‌ பதிலளித்தனர்‌.

Newsletter