தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஹை-பை பயோடெக்‌ இந்தியா பிரைவேட்‌ லிமிடெட்‌, சேலம்‌ இடையே வாழை வீரிய இரகங்கள்‌ உற்பத்தி ஒப்பந்தம்‌!

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஹை-பை பயோடெக்‌ இந்தியா பிரைவேட்‌ லிமிடெட்‌, சேலம்‌ இடையே வாழை வீரிய இரகங்கள்‌ உற்பத்தி ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஹை-பை பயோடெக்‌ இந்தியா பிரைவேட்‌ லிமிடெட்‌, சேலம்‌ இடையே வாழை வீரிய இரகங்கள்‌ உற்பத்தி ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வாழையில்‌ வீரிய இரகங்கள்‌ உற்பத்தி மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்மூலம்‌ கோ 2 என்ற வாழை வீரிய இரகம்‌ 2020ம்‌ ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வீரிய இரகம்‌, நெய்பூவன்‌ இரகத்தை ஒத்த இயல்புடையது மற்றும்‌ நூற்புழு தாக்கத்தைத்‌ தாங்கி வளரக்‌ கூடியது. தமிழ்நாட்டில்‌ வாழை அதிகம்‌ உற்பத்தி செய்யப்படும்‌ மாவட்டங்களில்‌ இந்த வீரிய‌ இரகத்தைப்‌ பயிரிட அதிக அளவில்‌ திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள்‌ தேவைப்படுகிறது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஹை-பை பயோடெக்‌ இந்தியா பிரைவேட் லிமிடெட், சேலம்‌ இடையே வாழை வீரிய இரகங்களின்‌ திசு வளர்ப்பு கன்றுகள்‌ உற்பத்திக்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ ந.குமார்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌ நேற்று(23.11.2020) ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சார்பில்‌ பதிவாளர்‌ முனைவர்‌. அ.சு.கிருஸ்ணமூரத்தி மற்றும்‌ ஹை-பை பயோடெக்‌ இந்தியா பிரைவேட்‌, சேலம்‌ சார்பாக முனைவர்‌ ப. முருகேசபூபதி, நிர்வாக இயக்குனர்‌ ஆகியோர்‌ ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

முதல்வர்‌, தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ கோவை, முனைவர்‌ இல.புகழேந்தி மற்றும்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ பழ அறிவியல்‌ துறை முனைவா்‌ மு.சை. அனீசா ராணி ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter