தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில்‌ விவசாயிகளுக்கு பயறு வகைப்‌ பயிர்களில்‌ தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி!

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, பயறு வகைத்துறையில்‌ செயல்பட்டு வரும்‌ தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்‌ மூலம்‌, பயறு வகைப்‌ பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி கோவை மாவட்டம்‌ தொண்டாமுத்தூர்‌ வட்டாரத்தில்‌ உள்ள தேவராயபுரம்‌ கிராமத்தில்‌ நேற்று நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, பயறு வகைத்துறையில்‌ செயல்பட்டு வரும்‌ தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்‌ மூலம்‌, பயறு வகைப்‌ பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி கோவை மாவட்டம்‌ தொண்டாமுத்தூர்‌ வட்டாரத்தில்‌ உள்ள தேவராயபுரம்‌ கிராமத்தில்‌ நேற்று நடைபெற்றது.

விவசாயிகளுக்கு பயறு வகைப்‌ பயிர்களில்‌ தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சியினை அளித்து விதை மாற்று விகிதத்தை அதிகப்படுத்துவதே இப்பயிற்சியின்‌ முக்கிய நோக்கமாகும்‌. பயறு வகைத்துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. இரா.பா.ஞானமலர்‌ அவர்கள்‌ தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த விவசாய பெருமக்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்‌.

விதை மைய இயக்குநர்‌ முனைவர்‌. செ. சுந்தரேஸ்வரன்‌ அவர்கள்‌ தரமான விதையின்‌ முக்கியத்துவத்தையும்‌, தரமான விதை உற்பத்தி மூலம்‌ விவசாயிகள்‌ இலாபம் ஈட்டும்‌ முறையையும்‌ எடுத்துரைத்தார்‌.

இதையடுத்து, பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல் மைய இயக்குநர்‌ முனைவர்‌. சே. கீதா அவர்கள்‌ அதிக மகசூல்‌ தரக்கூடிய பயறு வகைப்‌

பயிர்களின்‌ இரகங்களையும்‌ அதன்‌ முக்கிய குணாதிசயங்களையும்‌ எடுத்துரைத்து விவசாயிகளிடம்‌ கலந்துரையாடினார்‌.



இந்த பயிற்சியில்‌ பட்டத்திற்கேற்ற உயர்‌ விளைச்சல் இரகங்களைப்‌ பற்றியும்‌ இனத்தூய்மையைப்‌ பராமரிப்பது பற்றியும்‌, விதை நேர்த்தி முறைகள்‌ மற்றும்‌ விதை முலாம்‌ பூசுதல்‌ பற்றியும்‌ செயல்முறை விளக்கம்‌ அளித்தனர்‌. மேலும்‌, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை பற்றியும்‌ மற்றும்‌ உழவியல்‌ தொழில்நுட்பங்கள்‌ குறித்தும்‌ விளக்கமளித்தனர்‌.

இறுதியாக முனைவர்‌. சே. லஷ்மி, இணைப்‌ பேராசிரியர்‌ (விதை அறிவியல்‌) அவர்கள்‌ தொழில்நுட்ப பயிற்சியில்‌ கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்‌. இப்பயிற்சியில்‌ முப்பதுக்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌. இப்பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை பயறுவகைத்துறை விஞ்ஞானிகள்‌ திறம்பட ஏற்பாடு செய்தனர்‌.

Newsletter