தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் சார்பில் பட்டியிலன வகுப்பு வேளாண்‌ பெருமக்களுக்கு‌ ஒருங்கிணைந்த களை மேலாண்மைப்‌ பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, உழவியல்‌ துறையில்‌ செயல்பட்டு வரும்‌ அகில இந்திய களை மேலாணர்மை ஆராய்ச்சி திட்டத்தின்‌ மூலம்,‌ பட்டியிலன வகுப்பு வேளாண்மை பெருமக்களுக்கு வேளான்‌ பயிர்களில்‌ ஒருங்கிணைந்த களை மேலாண்மைப்‌ பற்றிய கூட்டம்‌ இன்று வளையபாளையம்‌ வட்டம்‌, உடுமலைப்பேட்டை தாலுக்காவில்‌ நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, உழவியல்‌ துறையில்‌ செயல்பட்டு வரும்‌ அகில இந்திய களை மேலாணர்மை ஆராய்ச்சி திட்டத்தின்‌ மூலம்,‌ பட்டியிலன வகுப்பு வேளாண்மை பெருமக்களுக்கு வேளான்‌ பயிர்களில்‌ ஒருங்கிணைந்த களை மேலாண்மைப்‌ பற்றிய கூட்டம்‌ இன்று வளையபாளையம்‌ வட்டம்‌, உடுமலைப்பேட்டை தாலுக்காவில்‌ நடைபெற்றது.

இத்திட்டமானது, பட்டியிலன வகுப்பு வேளாண் பெருமக்களுக்கு களை மேலாணர்மைப் பற்றிய விழுப்புணர்வு ஏற்படுத்தவும்,‌ அதற்குண்டான இடுபொருள்களை இலவசமாக கொடுக்கவும்,‌ நிதி உதவியை களை ஆராய்ச்சி இயக்குநரகம்‌, ஜபல்பூர்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்திடமிருந்து பெறப்பட்டது.



இப்பயிற்சியினை, முனைவர்‌, இ. ரா. சின்னமுத்து, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, உழவியல்‌ துறை அவர்கள்‌ தலைமையேற்று நடத்தி வேளாண்மைப்‌ பயிர்களில்‌ களைச்செடிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்,‌ களைக்கொல்லிகள்‌ பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார்.

மேலும், வேளாணர்‌ பெருமக்களுக்கு தேவையான இடுபொருட்களையும் வழங்கினார்‌. இப்பயிற்சியில், உடுமலைப்பேட்டை உதவி வேளாண்மை இயக்குநர்‌, திருமகள் ஜோதி மற்றும்‌ பொங்கலூர்‌ வேளாணர்மை அறிவியியல்‌ நிலைய உதவிப்பேராசிரியர்‌ முனைவர்‌. ப. கதிரவன்‌, பங்கேற்று வேளாண்‌ பெருமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்‌.



இப்பயிற்சியின்,‌ முக்கியப் பகுதியாக களை மேலாணர்மை திட்டத்தின் இணைப்பேராசிரியர்‌ மற்றும்‌ முதன்மை விஞ்ஞானி, முனைவர் ப. முரளி அர்த்தனாரி, என்னென்ன களைக்கொல்லிகளை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும்‌ என்ற விபரங்களை மற்றும் விவசாய பெருமக்களுக்கு இடுபொருள்கள்‌ பற்றிய விபரங்களையும்‌ அதன்‌ பயனபாடு பற்றியும்‌ விபரமாக எடுத்துரைத்ததார்‌.



இப்பயிற்சியின் போது, வேளாணர் பெருமக்கள்‌ களைக்கொல்லிகள்‌ மூலம்‌ களை மேலாண்மையில்‌ ஏற்படும்‌ சந்தேகங்களை விரிவாகவும்,‌ விளக்கமாகவும்‌ தெரிந்து கொண்டனர். மேலும், இக்காலக்கட்டத்தில்‌ கூலி ஆட்கள்‌ பற்றாக்குறையினால்‌ ஏற்படும்‌ பிரச்சனைகளுக்கு மாற்று ஏற்பாடக களைக்கொல்லி பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும்‌ தெரிவித்தனர்.

மேலும்‌, வேளாணர் பெருமக்களுக்கு, பார்த்தீனியம்‌ மற்றும்‌ அதன்‌ பாதிப்புகள்‌ பற்றிய விளக்கங்களையும்‌ எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சியின்‌ இறுதியில்‌ முனைவர்‌. ௪. பாரதி, உதவிப்‌ பேராசிரியர்‌ மண்‌ணியல் நன்றி உரையாற்றினார்.

Newsletter