வரும் ஆகஸ்ட் 5ம் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையவழி காளான்‌ வளர்ப்பு பயிற்சி!

கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இணையவழி காளான்‌ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இணையவழி காளான்‌ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ ஒவ்வொரு மாதமும்‌ 5ம்‌ தேதி அன்று காளான்‌ வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தற்பொழுது கொரொனா வைரஸ்‌ தாக்கத்தினால்‌ நேர்முக பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில்‌ வரும்‌ மாதம்‌ ஆகஸ்ட்‌ 5ம்‌ தேதி அன்று (05.08.2020) காலை 10 மணி முதல்‌ மதியம்‌ 1 மணி வரை இணையவழி சிப்பிக்காளான்‌ வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள்‌ இப்பயிற்சியில்‌ கலந்து கொள்ள இணையதள முகவரி www.tnau.ac.in -ல்‌ 31.07.2020க்குள்‌ பதிவு செய்து பயிற்சி கட்டணம்‌ செலுத்த வேண்டும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

பயிர்‌ நோயியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண்‌: 0422 - 6611336

மின்னஞ்சல்‌: [email protected]

Newsletter