காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு - வேளாண் பல்கலைக்கழகம்

கோவை: காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை: காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்‌, தக்காளி, கத்தரிக்காய்‌ மற்றும்‌ வெண்டை ஆகியவை பெரும்பாலும்‌ நுகர்வு செய்யப்படும்‌ காய்கறிகளாகும்‌. தற்போது COVID-19 நெருக்கடியின்‌ மத்தியில்‌ அதிக உற்பத்தி தேவையின்‌ சுருக்கம்‌ மற்றும்‌ சந்தை சீர்குலைவு காரணமாக தக்காளி, கத்தரிக்காய்‌ மற்றும்‌ பிற முக்கிய பருவகால காய்கறிகளின்‌ மொத்த விலை நாடு முழுவதும்‌ 60 சதவீதம்‌ வரை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இருப்பினும்‌ விநியோக சங்கிலி கட்டுப்படுத்துதல்‌ மற்றும்‌ சீர்குலைவு காரணமாக பெரும்பாலான காய்கறிகளின்‌ சில்லறை விலை மாறாமல்‌ உள்ளது.

வர்த்தக மூலங்களின்‌ படி, இந்த ஆண்டு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. உணவு விடுதிகள்‌, திருமணம்‌ மற்றும்‌ பிற நிகழ்ச்சிகள்‌ COVID-19 காரணமாக பெரிய அளவில்‌ வரையறுக்கப்பட்டுள்ளதால்‌ தேவை குறைந்து காணப்படுகிறது. தற்போது கோயம்புத்தூர்‌ மொத்த விலை சந்தையில்‌ 60 சதவீத காய்கறிகள்‌, (தக்காளி மற்றும்‌ வெண்டை) கர்நாடகா மற்றும்‌ ஆந்திராவில்‌ இருந்து வருகின்றன. கேரளாவுக்கு காய்கறி இயக்கம்‌ அனுமதிக்கப்பட்டதால்‌ தினமும்‌ சுமார்‌ 30 சதவீதம்‌ காய்கறிகள்‌ கோவையிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தக்காளியின்‌ வரத்து குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ அதுவும்‌ ஜீன்‌- ஜீலை (சித்திரை பட்டம்‌ விதைப்பு) மற்றும்‌ அக்டோபர்‌ - நவம்பர்‌ (ஆடிப்பட்டம்‌ விதைப்பு) ஆகிய காலங்களில்‌ வருகிறது. தற்போது கோயம்புத்தூர்‌ மொத்த விலை சந்தைக்கு தக்காளியின்‌ வரத்தானது அதன்‌ சுற்று வட்டார பகுதிகளான செம்மேடு, கிணத்துக்கடவு, ஆலந்துறை, நாச்சிபாளையம்‌ மேலும்‌ ஆந்திரா மற்றும்‌ கார்நாடகாவிலிருந்தும்‌ வருகிறது.

மானாவாரி அமைப்பில்‌ ஆடிப்பட்டம்‌ கத்திரி பயிரின்‌ முக்கியமான பருவமாகும். இக்காலத்தில்‌ தென்மேற்கு பருவமழை கத்திரி உற்பத்தியை நிர்ணயிக்கிறது. சேலம்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ கிருஷ்ணகிரி ஆகியவை கத்திரிக்காய்‌ உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. வர்த்தக மூலங்களின்‌ படி தற்போதைய வரத்து கோயம்புத்தூர்‌, தேனி மற்றும்‌ கர்நாடகாவின்‌ மைசூர்‌ மாவட்டத்திலிருந்து வருகிறது.

தமிழ்நாட்டில்‌ வெண்டைக்காய்‌ பிப்ரவரி (தைப்பட்டம்‌) மற்றும்‌ ஜீன்‌ முதல்‌ ஆகஸ்ட்‌ (ஆடிப்பட்டம்‌) ஆகிய பருவங்களில்‌ அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலம்‌ மாவட்டத்தில்‌ தலைவாசல்‌, மகுடஞ்சாவடி வட்டாரங்கள்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ காரமடை, பெரியநாயக்கன்பாளையம்‌ மற்றும்‌ தொண்டாமுத்தூர்‌ வட்டாரங்கள்‌, தேனி மாவட்டத்தில்‌ ஆண்டிப்பட்டி வட்டாரம்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டத்தில்‌ மையம்பட்டி வட்டாரம்‌ ஆகிய பகுதிகளில்‌ பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின்‌ படி வெண்டையின்‌ பெரும்பாலான வரத்தானது ஓசூர்‌, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம்‌ மற்றும்‌ உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கோயம்புத்தூர்‌ சந்தைக்கு வருகிறது.

இஸ்ரேலில்‌, விவசாயிகள்‌ சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, ஒட்டன்சத்திரம்‌ சந்தையில்‌ கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகள்‌ மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌ அறுவடையின்போது (ஆகஸ்ட்‌-செப்டம்பர்‌) தரமான தக்காளியின்‌ பண்ணை விலை ரூ.16 முதல்‌ ரூ.18 வரை நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 20 முதல்‌ ரூ. 23 ஆகவும்‌ மற்றும்‌ தரமான வெண்டையின்‌ பண்ணை விலை ரூ.15 முதல்‌ ரூ. 17 வரை இருக்கும்‌ என்று அறியப்படுகிறது. இவ்விலையானது, தென்மேற்கு பருவமழையைப்‌ பொறுத்து மாறுபடும்‌. எனவே விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின்‌ அடிப்படையில்‌ சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண்‌: 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

காய்கறிப்‌ பயிர்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண்‌: 0422-6611374

Newsletter