கோவை வேளாண் பல்கலையில் அன்றாட வாழ்வில்‌ வானிலையின்‌ முக்கியத்துவம்‌ பற்றிய பயிற்சி திட்டம்‌!

கோவை வேளாண் பல்கலையில் அன்றாட வாழ்வில்‌ வானிலையின்‌ முக்கியத்துவம்‌ பற்றிய பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கோவை: கோவை வேளாண் பல்கலையில் அன்றாட வாழ்வில்‌ வானிலையின்‌ முக்கியத்துவம்‌ பற்றிய பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ அமைந்துள்ள வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌ தொடர்ந்து விவசாயிகளுக்கான வானிலை சார்ந்த வேளாண்‌ அறிவுரைகளை வழங்கி வருகிறது.

வானிலையானது விவசாயிகளுக்கு மட்டுமல்லாது பொதுவாழ்வில்‌ உள்ள தனி மனிதர்களுக்கும்‌ முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விவசாயிகள்‌ மட்டுமல்லாது மாணவர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ ஆகிய அனைவரும்‌ வானிலை குறித்து தற்போதைய சூழ்நிலையில்‌ ஏற்பட்டுவரும்‌ காலநிலை மாற்றங்கள்‌ குறித்தும்‌ அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்‌.

தற்போதைய கோவிட்‌ 19 வைரஸ்‌ தாக்குதல்‌ ஏற்பட்டு மீண்டு வரும்‌ சூழ்நிலையில்‌ அனைவரும்‌ தெரிந்து கொள்ளும்‌ வகையில்‌ காணொலி காட்சி வாயிலாக “அன்றாட வாழ்வில்‌ வானிலையின்‌ முக்கியத்துவம்‌” என்ற தலைப்பில்‌ பயிற்சி முகாம்‌ ஒன்றினை வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌ நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயிற்சி முகாம்‌ ஜீன்‌ 17 ம்‌ தேதி துவக்கப்பட்டு ஜீன்‌ 26 ம்‌ தேதி நிறைவு பெறும். மேற்காணும்‌ பயிற்சி நாட்களில்‌ (சனி மற்றும்‌ ஞாயிறு தவிர) மதிய வேளையில்‌ 3 மணி நேரம்‌ வகுப்புகள்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ நடத்தப்பட உள்ளது. இக்காணொலி காட்சி வகுப்புகள் Google meet என்ற செயலி மூலம்‌ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே Gmail மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தி கொள்ளவும்‌. இப்பயிற்சியில்‌ கலந்து கொள்ள குறைந்த பட்சமாக +2 மற்றும்‌ பட்டயப்படிப்பு முடித்தவர்கள்‌ பயிற்சி கட்டணமாக ரூபாய்‌ 200 மட்டும்‌ பாரத ஸ்டேட் வங்கிக்‌ கிளை (SBIN0002274) வங்கிக்‌ கணக்கு எண்‌ 31606418668 ல்‌ செலுத்தி தொலைபேசி எண்ணில்‌ 9486186076 மற்றும் meteorology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும்‌ முன்பதிவு செய்யும்‌ நூறு பயிற்சியாளர்களுக்கு மட்டும்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ பயிற்சி அளிக்கப்படும்‌.

எனவே விருப்பம்‌ உள்ளவர்கள்‌ 15.06.2020 தேதிக்குள்‌ முன்பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter