தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மகளிர்‌ மன்றம் சார்பில் பண்ணை மற்றும்‌ தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி வழங்க ஏற்பாடு

கோவை: கொரோனா வைரஸ்‌ தாக்குதலின்‌ காரணமாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பண்ணையில்‌ பணிபுரியும்‌ பண்ணை மற்றும்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மகளிர்‌ மன்ற புரவலர் ராஜலட்சுமி குமார்‌ அவர்கள்‌ காய்கறிகள்‌ வழங்க ஏற்பாடு செய்தார்‌.

ஓவ்வொரு பண்ணை மற்றும்‌ தூய்மைப்‌ பணியாளருக்கும்‌ பெரிய வெங்காயம்‌, தக்காளி, கத்தரி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்‌, கேரட்‌, பீன்ஸ்‌, வெண்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்‌, எலுமிச்சை ஆகியவை ஆர்.எஸ்.புரம்‌ உழவர்‌ சந்தையின்‌ உதவியோடு மேற்கண்ட காய்கறிகள்‌ விவசாயிகளிடமிருந்து மகளிர்‌ மன்ற உறுப்பினர்கள்‌, நாட்டு நலப்பணித்‌ திட்ட மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ à®ªà®™à¯à®•ளிப்போடு பெறப்பட்டது.

காய்கறிகள்‌ தனித்தனியாக பைகளில்‌ போடப்பட்டு ஒவ்வொரு பண்ணைக்கும்‌ அவர்களின்‌ பிரதிநிதிகள்‌ மூலமாக ராஜலட்சுமி குமார்‌ அவர்களால்‌ பல்கலைக்கழக முதன்மையர்‌ (வேளாண்மை) முனைவர்‌ மு. கல்யாணசுந்தரம்‌, பயிர்‌ மேலாண்மை மைய இயக்குநர்‌ முனைவர்‌ வெ. கீதாலட்சுமி, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ இரா. சாந்தி, நெல்‌ துறை தலைவர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ கு. கணேசமூர்த்தி மற்றும்‌ நாட்டு நலப்பணித்‌ திட்ட அலுவலர்கள்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ சமூக இடைவெளி பின்பற்றி சுமார்‌ 400 பண்ணை மற்றும்‌ தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பணியாளர்கள்‌ அனைவரும்‌ மகளிர்‌ மன்றத்தின்‌ உதவிக்கரத்தினைப்‌ பாராட்டி நன்றி தெரிவித்தனர்‌.

Newsletter