வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ பண்ணைத்‌ தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ்‌ பற்றிய விழிப்புணர்வு!

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள பண்ணைகளில்‌ பணியாற்றும்‌ தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ்‌ பற்றி விழிப்புணர்வு இன்று ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள பண்ணைகளில்‌ பணியாற்றும்‌ தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ்‌ பற்றி விழிப்புணர்வு இன்று ஏற்படுத்தப்பட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தரின்‌ அறிவுறுத்தலின்படி இன்று (20.3.2020) உழவியல்‌ துறையின்‌ மத்திய பண்ணை தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பற்றிய தெளிவு மற்றும்‌ கொரோனா வைரஸ்‌ பரவக்கூடிய வாய்ப்புகளும்‌ அதனால்‌ ஏற்படும்‌ இருமல்‌, தும்மல்‌ மற்றும்‌ பொருட்களின்‌ மூலம்‌ வைரஸ்‌ பரவும்‌ முறைகள்‌ குறித்து பல்கலைக்கழக மருத்துவரால்‌ விளக்கமளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து, கை கழுவுவதற்குரிய சோப்பு திரவத்தினைப்‌ பயன்படுத்தி எவ்வாறு கைகளைக்‌ கழுவ வேண்டும்‌ என்றும்‌, கொரோனா அறிகுறிகள்‌ தென்படுவோரிடம்‌ எவ்வாறு விலகியிருக்க வேண்டும்‌ போன்ற நடைமுறைகள்‌ குறித்தும்‌ அறிவுறுத்தப்பட்டது.



இந்நிகழ்வில்‌ உழவியல்‌ துறை தலைவர்‌ முனைவர்‌ சி.ஆர்‌. சின்னமுத்து, பல்கலைக்கழக மருத்துவர்கள்‌, மத்திய பண்ணை மேலாளர்கள்‌ மற்றும்‌ பல்ககைகைழக பேராசிரியர்கள்‌ ஊழியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter